அப்துல் கலாம் கனவை நினைவாக்கிய மாணவன் கார்த்திக் ஏழுமலை | World’s First Digital Key for Two Whelers

அப்துல் கலாம் கனவை நினைவாக்கிய மாணவன் கார்த்திக் ஏழுமலை | World’s First Digital Key for Two Whelers

உலகெங்கும் இன்று “பாதுகாப்பு கண்காணிக்கும் சாதனங்கள்”மக்கள் மத்தியில் கோலோச்சுகின்றன. ஏன் எனில்,

நாளுக்கு நாள் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிக்கொண்டே உள்ளது.அதே நேரத்தில் அது சார்ந்த குற்றங்களும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.இதை தடுக்க தமிழக அரசின் காவல்துறை பல இடங்களில் காண்கணிப்பு காணொளிக்கருவிகளை பொருத்தி வருகிறது.ஆனால் இந்த கண்காணிப்பு காணொளிக்கருவிகள் ஒரு குற்றம் நடந்த பின்னரே குற்றவாளி யார் என கண்டுபிடிக்க உதவும்.உதரணமாக ஒரு இரு சக்கர வாகனம் திருடப்பட்ட பின்னரே அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடிக்க உதவும்.

DigiKey (Remote & Device)

ஆனால் இன்று எங்களால் மேம்படுத்தப்பட்ட ” எண்ணியல் பாதுகாப்பு தொழில்நுட்பம்” வருமுன் காக்க என்பது போல வாகனங்கள் திருடு போவதை தடுக்க உதவும்.அதைப்பற்றிய விளக்கங்களைப்பார்ப்போம்.

கண்டுபிடிப்பு DigiKey என்ற இருசக்கர வாகனங்களுக்கான எண்ணியல் தொழில்நுட்ப பாதுகாப்பு திறவுகோல்.

இந்த DigiKey திறவுகோல் அமைப்பு நம் இருசக்கர வாகனத்தோடு மிக நெருக்கமாக பொருந்தக்கூடியது.இந்த மிக நுண்ணிய தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் இந்த தொழில்நுட்ப அமைப்பானது மூடு நிலையில் அமைக்கப்படும் போது, திருடர்களிடம் இருந்தும்,நமக்கு தெரியாமல் வாகனத்தை இயக்க முயல்பவரிடம் இருந்தும்,போலிச்சாவி மூலம் வாகனத்தை இயக்க முற்படுபவரிடம் இருந்தும் வாகனத்தின் பூட்டு உடையாமல் பாதுகாக்க உதவுகிறது.

Remote Lock / Unlock System

In the Box (Alarm,Device Box,Remote Lock)

இந்த DigiKey எண்ணியல் பாதுகாப்பு தொழில்நுட்ப திறவுகோல் எண்ணற்ற ரகசிய குறியீடுகளை கொண்டுள்ளது.இது தொலைதூரத்தில் இருந்து நம் வாகனத்தை இயக்கவும் செய்யும்.எனவே நம் வாகனத்தின் சாவி தொலைந்து போனாலும் ,இந்த தொழில்நுட்ப திறவுகோலை வைத்து வண்டியை இயக்க முடியும்.

அதே நேரத்தில்,இது உளவியல் ரீதியாகவே மக்களுக்கு நம் வாகனத்தை பாதுகாக்க ஒருவர் உள்ளார் என்ற ஒருவித பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

Buy Now : Digikey (Bike Lock System)

Related Posts
1 Comment
Karthik

Awaiting for the product …. Vazhuthukal Karthick

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Need Help? Chat with us